திருவாரூர் மாவட்டம் வடகண்டம் பகுதியில் வட்டார அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் இருந்தது. வந்தவர் அலிவலம் பூபதியிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் பறிமுதல் செய்தனர். திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான சத்யாவிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.