வலங்கைமான் பெரிய பள்ளியில் சமத்துவ பொங்கல்
NEWS Jan 15,2026 12:51 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் அருகே சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜஎன்டியுசி தொழிற்சங்க தலைவர் வலஙகை குலாம்மைதீன் தலைமை வகித்தார். பெரிய பள்ளிவாசல் செயலாளர் சலீம் துவக்கி வைத்தார். அமானுல்லா அனீஸ், ஜமாலி ஜாமியா மஸ்ஜித் இஸ்மத் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.