நேதாஜி சுபாஷ் பிறந்த நாள் விழா
NEWS Jan 24,2026 09:09 am
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் மன்னார்குடி வடக்கு வீதி சந்திப்பில் உள்ள நேதாஜி சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முக்குலத்து புலிகள் கட்சி மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.