பொதக்குடி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை
NEWS Jan 26,2026 10:26 am
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழையாகவும், சில பகுதிகளில் கனமழையாகவும் பதிவானது. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து மக்களின் நடமாட்டம் மந்தமானது. வயல்களில் நீர்ப்பாசன தேவைக்கு இந்த மழை உதவியாக இருக்கும் என கூறினர்.