திருவாரூர்ல் குடியரசு தின விழா
NEWS Jan 27,2026 10:53 am
திருவாரூர் விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசார் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண்கரட் உடனிருந்தார். குடியரசு தினவிழாவில் பதக்கங்களை காவலர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.