கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
NEWS Feb 10,2026 10:44 pm
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு நிவாரண தொகையை அனைவருக்கும் வழங்கிட கோரியும், வயலுக்கு தண்ணீரை இந்த மாதம் இறுதிவரை மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்துவிட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.