திருவாரூரில் வணிகர் சங்கம் ஆலோசனை கூட்டம்
NEWS Apr 30,2026 02:51 pm
திருவாரூரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அதன் மாவட்ட தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே 5ம் தேதி திருவாரூரில் 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது.