திருப்பாலக்குடி தண்டாயுதபாணி கோவிலில் திருவிளக்கு
NEWS Jan 31,2026 10:37 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருப்பாலக்குடி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் சுமங்கலி திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். விளக்குகள் ஏற்றி அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.